செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 -சில நெகிழ்ச்சியான தருணங்கள்..

2013 -சில நெகிழ்ச்சியான தருணங்கள்..

2013 சோதனையான ஆண்டாக இருந்தாலும் நிறைய நெகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டது..

** அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட உடனே வந்து தோளோடு தோளாக நின்ற உறவினர்களின் வருகை உண்மையிலேயே தைரியத்தை கொடுத்தது...
நமக்கு ஒரு பிரிச்சனை வரும் போது நமக்கு கிடைக்கும் ஆதரைவையே பொறுத்தே நாம் சமுகத்தை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோமா என்று தெரிய வரும்..அப்பாவின் விபத்து நாம் சமுதாயத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டியது..


** சுஜெயின் பள்ளி பருவ தொடக்கம்(LKG)

** எங்கள் Royale Process CTP நிறுவனத்தின் Digital Printing தொடக்கம்

** மதன் ஆர்த்தி திருமணம்

** நாங்கள் இன்னும் சின்ன பையனாகவே நினைத்து கொண்டு இருக்கும் கார்த்தியின் பொறியாளர் ஆவதற்கு கல்லூரி சென்றது

** இரண்டு முறை திருப்பதி பயணம்.அதில் ஒரு முறை திருமலை நடந்தே சென்றது புது அனுபவம்

** குலதெய்வம் ஆண்டுவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க ஏனைய பங்காளி வீடுகளுக்கு சென்றது புது அனுபவம்
 
** இடுவம்பாளையத்தில் பட்டகாரர்கள் சார்பாக கட்டி வரும் புது திருமண மண்டபத்திற்கான கூட்டங்களில் பங்கெடுத்தது....

இப்படி புது விதமான அனுபவங்களையும் பெற்று கொடுத்தது 2013....

2013

2013
----------

இந்த 2013ம் ஆண்டு எனக்கு தனிப்பட்ட முறையில் கொஞ்சம் சோதனையான ஆண்டாகவே அமைந்தது...

அப்பாவுக்கு ஏற்பட்ட விபத்து அதை தொடர்ந்து சிகிச்சைக்கான அலைச்சல்கள்......
இந்த விபத்தை சட்டபூர்வமாக சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்...

எப்படியாவது அடுத்தவன் காசை அபகரிக்க வேண்டும் என்று கூட்டாக திரியும் மனிதர்களை நிறைய சந்தித்தது.......

மேலும் ஒரு  சில்லறைதனமான செயல்பாடு என்னை மிக வும் கோபமுற செய்தது அதை விட அந்த சில்லரைதனத்தை எல்லோரும் இணைந்து ஆதரவு குடுப்பது அதை விட கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.....

இந்த சோதனைகள் எல்லாம் இருந்தாலும் எதையும் தாங்கும் மனத்திடத்தையும் அதை எதிர் கொள்ளும் துணிச்சலையும் மிக ஆழமாக என்னுள் விதைத்து விட்டே விடை பெறுகிறது இந்த 2013..........

தீயவைகளை எல்லாம் கடவுள் பார்த்துகொள்வார்  என்ற மீண்டும் ஒரு முறை நம்பிக்கை வைக்கிறேன்.
2014 மிக அருமையான ஆண்டாக அமையும் என்று உறுதியாக  நம்புகிறேன்...
  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

ஆம் ஆத்மியை பற்றிய என் பார்வை

ஆம் ஆத்மி இது வரை உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை விட தெளிவாக ஆட்சி மற்றும் அரசியல் செய்யும் என்பதே என் கருத்து..

அதற்கு உதாரணம் அவர்கள் ஆட்சி அமைக்க முன்வந்ததும் அதற்கு அவர்கள் செய்த செயலும் சொன்ன காரணங்களும்.. அவர்கள் கட்சி MLA கள் பலர் ஆட்சி அமைக்க வற்புறுத்தியதாக ஒரு செய்தி பரவியது.இருந்தாலும் அதை சொல்லாமல் மக்களிடம் கேட்டு அதனால் ஆட்சி அமைக்க
முடிவு செய்ததாக சொன்னார்கள்..

இதனால் அவர்கள் மேல் வைக்கப்பட்ட இரண்டு விமர்சனகளை (ஆட்சி அமைக்காமல் பயந்து ஓடுகிறார்கள் மற்றும் இன்னொரு தேர்தல் வரவைப்பது மூலம் மக்கள் பணத்தை வீணடிகிரர்கள்) உடைத்தார்கள்.கூட போனஸாக தாங்கள் மக்களிடம் கேட்டு தான் முக்கிய முடிவு எடுபதாகவும் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.....

இதுவே மிக சாதுரியமான செயல்....

அது போல இப்போது இருக்கும் அரசியல்கட்சிகள் மிக சோம்பேறித்தனமாகவும்/தனக்கு ஆதாயம் தேடியும்  தான் பணி புரிந்து வருகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியினர் முதல் முறையாக ஆட்சி பணி செய்வதினால்(இவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பது கூடுதல் திறன் ) கண்டிப்பாக மிக சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள் அதனால் மக்கள் பயன் பெறபோகிரார்கள் என்பதே என் பார்வை.

இப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்ததன் விளைவை பின்னால் கண்டிப்பாக அனுபவிக்க இருக்கிறது.

ஆம் அத்மி தங்கள் ஆட்சியில் ஏதாவது சிரமம் ஏற்படும் போது உடனே முந்தய ஆட்சியின் ஊழல் விசாரணை என்ற பேரில் காங்கிரஸ்காரர்களை கைது செய்வார்கள்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தாலும் ஆம் ஆத்மிக்கு அனுதாப ஆதாயம்...
சும்மா இருந்தாலும் ஆம் ஆத்மிகு அதிரடி நடவடிக்கை ஆதாயம்..

இப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்ததன் விளைவை பின்னால் கண்டிப்பாக அனுபவிக்க இருக்கிறது.

என்னை பொறுத்த வரை அரவிந்த் கேஜிர்வால் கலைஞரை போல ராஜதந்திரம் மற்றும் திறமை வாய்ந்தவராகவே தெரிகிறார். கலைஞர் அவருடைய சுயநலத்திற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஒவொரு விசயத்திலும்  ஆதாயம் தேட முற்பட்டதினால் தான் அவரால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனது.
தன் திறமையை அரவிந்த் கேஜிர்வால் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்தே அவர் மக்கள் மனதில் நிலைப்பாரா இல்லையா என்பது தெரியும்

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஏழுமலையானை தரிசிக்க ஒரு அமைதியான ஆனந்த பயணம்..














9 கீ மீ...
3550 படிகள்
ஏழுமலை நடந்து கடந்து ஏழுமலையானை தரிசிக்க ஒரு அமைதியான ஆனந்த பயணம்..
வழி  நெடுகிலும் அனைத்து வயதிலும்(6 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை)/அனைத்து மொழி பேசும் மனிதர்களையும்.
வித்தியாசமான வழிபாடுகளையும் காண முடிந்தது...
..
ஒவ்வொரு படியிலும் மஞ்சள் /குங்குமும் வைத்து செல்பவர்கள்.............
ஒவ்வொரு படியிலும் சூடம் ஏற்றி செல்பவர்கள்......
ஒவ்வொரு செட் படி ஆரம்பிக்கும் போது  முட்டி போட்டு செல்பவர்கள் .......
ஒவ்வொரு செட் படி ஆரம்பிக்கும் போது விழுந்து வணங்கி செல்பவர்கள்...
கோவிந்தா கோவிந்தா என்று பாடி கொண்டு செல்பவர்கள்...

கைகுழந்தையை சுமது கொண்டு வருபவர்கள்..
தாவி கொண்டு வேகமாக 5/6 வயது சின்ன பிள்ளைகளை கவனமாக பார்த்து போக சொல்லி கொண்டே ஓடும் பெற்றோர்ர்கள்
நடக்க முடியாத வயதான அம்மாக்களை இன்னும் கொஞ்ச தூறும் தான் என்று  ஆறுதல் வார்த்தை சொல்லி ஊக்கபடுத்திகொண்டே அழைத்து செல்லும் மகள்கள்/மகன்கள்.....
கணவர்களின் தோளை பிடித்து தொங்கி கொண்டு வரும் மனைவிமார்கள்.....
நடக்க முடியாதவர்களுக்கு வேண்டும் மென்றே இன்னும் சிரமமான  பாதை தான் அதிகம் என்று பயமுறுத்தி கொண்டே செல்லும் நண்பர்கள்..

இப்படி பல விதமான மனிதர்களையும்/ சம்பவங்களையும்/வழிபாடுகளையும் பார்த்து கொண்டு ஒன்பது அவதாரங்களை வணங்கி கொண்டும் வழியில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு கொண்டு செல்வது ஒரு சுகமான அனுபவம்.
அதுவும் நாங்கள் செல்லும் போது மழை  வருவது போல் இருதததால் ஜில்லென்ற காற்றை அனுபவித்து கொண்டே சென்றது வார்த்தையால் விவரிக்க முடியாது..

நீங்கள் முடித்தால் ஒரு முறை இந்த அனுபவத்தை உணருங்கள்.....

செவ்வாய், 26 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்--30/50

டைரக்டர்களில் பல வகை உண்டு.

1) வழக்கமான கதையை ரசிக்கும்படியான திரைக்கதையுடன் படம் எடுக்கும் கே எஸ் ரவிக்குமார்/ஹரி போன்றவர்கள்
2) வித்தியாசமான கதை மக்கள் ரசிக்கும் படி சொல்லும் ஷங்கர்/பாலாஜி சக்திவேல் போன்றவர்கள்
3) கமர்சியல் படம் எடுக்கிறேன் சொல்லிக்கிட்டு எந்த ரிஸ்கும் எடுக்காமல் மொக்க படம் எடுக்கும் பேரரசு/சக்தி சிதம்பரம் போன்றவர்கள்.

இதில் முதல் 2 வகை நாம் நினைக்க வேண்டியதே இல்லை.எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள்.
3வது வகை பற்றி நாம் கவலை படவேண்டியது இல்லை என்ன அவுங்க ரிஸ்கும் எடுக்கிறது இல்லை அதனாலே பெரிய வெற்றியும் பெறுவது இல்லை.

அனால் செல்வராகவன்/மணிரத்தினம் போன்றவர்கள் நிலைமையை தான் என்னன்னு சொல்றதுன்னு தெரியலே.
ரொம்ப வித்தியாசமா யோசிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு மிகுந்து பொருள் செலவில் படம் எடுப்பார்கள்.
ஆனால் அந்த படமும் ரசிக்கும் படி இருக்காமல் போவது தான் கவலை பட வைக்கிறது..

அப்படி பட்ட ஒரு படம் தான் இரண்டாம் உலகம்...

மிக வித்தியாசமான சிந்தனை.அதற்கு ஏற்றார் போல VFX வேலைகள்.இரண்டு முன்று வருட உழைப்பு..இதனையும் செய்தும் படம் ரசிக்கும் படி இல்லை என்பது தான் உண்மை..

Fantasy Movie எடுக்கும் போது நான் ஈ எந்திரன் போன்ற மக்கள் ரசிக்கும் படி செய்து இருக்க வேண்டும்..

இந்த படத்தில் நமக்கு தெரியாத ஒரு உலகத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார் செல்வா,,
ஆனால் நமக்கு தான் பிடிக்கவில்லை.

ஆர்யா -முதல் பாதியில் சுமாரான நடிப்பு.இரண்டாவது பாதியில் பெரிய ரிஸ்க் எடுக்கமால் தேமே  என்று வருகிறார்  ஆனால்  ஒன்று   ஒழுங்கா நடிகவிட்டலும் படத்தின் PROMOTION வேலைகளில்  கதாநாயகிகளோடு சேர்ந்து நன்றாக எல்லா டிவி சேனல்களிலும் செய்கிறார்.

அனுஸ்காவுக்கு நடிக்க  நெறைய  வைப்பு.நன்றாகவே செய்து இருக்கிறார்..

இவர்கள் இருவரை தவிர படத்தில் நினைவு இருக்கும் பாத்திரங்கள் அனுஷ்கா தோழியாக வரும் பொண்ணு மற்றும் ஆக வருபவர் இருவருமே நன்றாக நடித்து இருக்கிறார்கள்..

அனுஸ்காவிடம் அவரின் தோழி மருத்தவர் பாஷையிலேயே ஆர்யாவை விவரிப்பது/ஆர்யாவும் அவரின் நண்பரும்  பேசிக்கொள்ளும் காட்சி மற்றும் ஆர்யா ப்ரோபிச்சொரை தான் காதலிபதாக  சொல்லும் காட்சி போன்ற காட்சிகளில் செல்வா டச்..

இனிமேலாவது செல்வராகவன் ஜனரஞ்சமான மக்கள் ரசிக்கும்படி படம் எடுப்பார் என்று நம்பலாம்.
அப்படி செய்தால் தொடர்ச்சியாக வெற்றியை கண்டிப்பாக தருவார் என்று நம்பலாம்.

இன்று கூட இனிமேல் சிறிய பட்ஜெட படங்களை எடுக்க போவதாகவும் action படம் எடுக்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்...நிச்சயம் வரவேற்போம்.இது போன்ற நல்ல கலைஞர்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்  

சனி, 9 நவம்பர், 2013

அழகுராஜா-சினிமா விமர்சனம்.

(மிகுந்த கோபத்துடன்) அழகுராஜா-சினிமா  விமர்சனம்....- 20/50.

எனக்கு என்னமோ காமெடி படங்களின் காலகட்டம் முடிந்தது என்று தான் தோன்றுகிறது...

வர வர காமெடி எது மொக்கை எது என்று தெரியாமல் படம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்..

இனிமேல் டைரக்டர் ராஜேஷ் தன் பட பாணியை மாத்த வேண்டியது அவசியம் வெறும் சந்தானத்தை நம்பி படம் எடுத்தால் பார்க்க ஆள் இருக்க மாட்டார்கள்......

பருத்திவீரன்/ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து நல்ல பேர் பெற்ற திறமையான நடிகர்  கார்த்தி ஏன் சந்தானத்தை நம்பி கமர்சியல் படங்களில் நடிக்கிறார் என்று தெரியவில்லை.
தொடர்ச்சியாக சகுனி/அலெக்ஸ் பாண்டியன் இப்போது அழகுராஜா பிளாப்.......

கதை சரியாக தேர்வு செய்து கண்டிப்பாக அடுத்த படமான பிரியாணியில் இருந்து வெற்றி படங்களாக குடுப்பார் என்று நம்புவோம்.....

சந்தானம்-காமெடியன்கள் பஞ்சம் உள்ள இந்த காலகட்டத்தில் சந்தானம் எல்லா படங்களிலும் நடிப்பதால் அவருடைய காமெடி சலித்து போய் விட்டது......
கவுண்டமணி/வடிவேல் காமெடி எல்லாம் சலிக்காமல் இருபதற்கு கரணம் அவர்களது காமெடி இல்லாமல் அவர்களது body language தான் நம்மை சிரிக்க வைத்தது.
ஆனால் சந்தானம்/விவேக் காமெடி எல்லாம் timing காமெடி அதனால் தான் விவேக்கால் நிலைத்து நிற்க முடியவில்லை.அவரும் வித்தியாசமாக நடித்தால் தான் படிக்காதவன்/மாப்பிள்ளை/உத்தமபுத்திரன் போன்ற படங்களில் பேர் பெற முடிந்தது....
சந்தானம் உஷார்......

சும்மா சும்மா சிரிபவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்.....   

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா- விமர்சனம்

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா -40/50........

முழுநீள நகைசுவை படம் என்று சொல்லுவார்களே அதற்கு பொருத்தமான படம்..
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அருமையான நகைசுவையுடன் மதுவினால் ஏற்படும் தீமையை பற்றி சொல்லி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.வாழ்த்துக்கள்...

விஜய் சேதுபதி-செய்கின்ற வேலையை ரசித்து மிகுந்த அர்பணிப்புடன் செய்தால் அதற்கு பலன் உண்டு என்று மிகவும் நம்புகிறார் இவர்...
அதன்படி உழைப்பை தருகிறார்...
வெற்றி அவரை தேடி வருகிறது...
அவருடைய பாடி லாங்குவேஜ்/சென்னை தமிழ் அருமை உண்மையிலேயே கலக்கி இருக்கிறார்...ஒவொரு முறையும் 'அமுதா ஹாபி அண்ணாச்சி' என்று சொல்லும் பொது திரைஅரங்கம் முழுவதும் சிரிப்பலை.......

அஸ்வின்/இரண்டு கதாநாயகிகள்/அஸ்வினின் நண்பர்களாக வருபவர்கள்/சூரி அனைவரும் மிகை இல்லாமல் சிறப்பாக நன்கு நடித்து இருக்கிறார்கள்.சூரி வரும் சில நேர காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்....

இவர்கள் இல்லாமல் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில கதாபாத்திரங்கள் ஒன்று பசுபதி/ரோபோ ஷங்கர் குரூப்...
இன்னொன்று நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் அவர் கூட வரும் பட்டி பாபு...

பசுபதி பண்ணும் அந்த கட்ட பஞ்சாயத்து காட்சிகள் சூப்பர்....ஒரு சிறந்த நடிகனால் நகைசுவையை நன்றாக தர முடியும் என்பதை ஒவொரு காட்சியிலும் நிருபிக்கிறார்..இவரை ஏன் நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்று தெரியவில்லை...

நான்கடவுள் ராஜேந்திரன் -இவரை மிக கொடூரமான் வில்லனாக பார்த்த நமக்கு இவரின் நகைசுவையான நடிப்பு ஓர் ஆச்சர்யம் தான்.....

இந்த படத்தில் முக்கியமாக சொல்ல படவேண்டிய விஷயம்..நடன அமைப்பு..ராஜு சுந்தரம்..மிக வித்தியாசமான எளிமையான நடன அமைப்பு---நம்மை ஈர்க்கிறது....

கோகுல்-சுமாராய் போன ரௌத்திரம் திரைப்படத்திற்கு பிறகு அருமையான திரைக்கதை/காட்சி அமைப்பு/சூப்பர் ரான வசங்கள்/பொருத்தமான நடிகர் தேர்வு என்று தன்னை நிருபித்து இருக்கும் இன்னொரு இளம் இயக்குனர்.
வாழ்த்துவோம்    
மொக்கை காமெடி(வருத்தபடாத வாலிபர் சங்கம்) படங்களை எடுக்கும் இந்த படத்தை பார்த்து கற்று கொள்ள வேண்டியது அவசியம்....

திங்கள், 9 செப்டம்பர், 2013

வருத்தபடாத வாலிபர் சங்கம்- விமர்சனம்

வருத்தபடாத வாலிபர் சங்கம்-20/50

ரெண்டு மூணு குத்து பாட்டு/கொஞ்சம் காமெடி காட்சிகள்/வசனங்கள் இருந்து விட்டால் போதும் இந்த தமிழ்நாடு அரமண்டைய ரசிகர்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று திமிரில் எடுக்க பட்ட படமாகவே இதை நான் சொல்வேன்..

கதையே இல்லை..
சம்பந்தம் இல்லாமல் வரும் காட்சி அமைப்பு....
சொதபலான திரைகதை.....
தெளிவு இல்லாத பாத்திர படைப்பு.....
இப்படி பல குறைகளை வைத்து கொண்டு இது ஒரு  சூப்பர் படம்(FEEL GOOD MOVIE) என்ற ரேஞ்சுக்கு பில்ட் அப் பண்ணி Promote பண்ணி விளம்பரங்கள் எல்லாம் ஓவராக பண்ணி மக்களை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள்..

சிவ கார்த்திகேயன்-இவருடைய  Body language பார்க்கும் போது இவர் தன்னை ஒரு பெரிய ஸ்டாராகவே உரு வாகி விட்டதாக நினைக்கிறார் போலும்..
படத்தில் சமையல் செய்பவரை போல கலர் கலரா வேட்டி கட்டிக்கிட்டு வரார்....
ஒரு ஒரே + நன்றாக டான்ஸ் ஆடுகிறார்..

எதிர் நீச்சல் படத்தை போல தேர்ந்து எடுத்து அடக்கி வாசிக்காவிட்டால் மீண்டும் விஜய் டிவி கே போக வேண்டியது தான்...
முன்னேறுவதற்கு தான் நாள் ஆகும்.சறுகுவதற்கு சில தினம் போதும்...

சத்யராஜ்-இவர் நிலைமையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது..ஒரு காலத்தில் ரஜினியை பற்றி எல்லாம் தெனாவெட்டாக பேசிக்கொண்டு/சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க கேட்ட போது நான் ஹீரோ எப்படி என்னை வில்லனாக நடிக்க கேக்கலாம்/நான் நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பார என்றெலாம் கேட்ட  மனுஷன் கேரக்டர் ரோல் கிடைக்க வேண்டும் என்பதற்காக விஜய் ஆரம்பித்து இப்போ சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களை பற்றி எல்லாம் மிக உயர்வாக பேசி காலம் தள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார்...

சூரி-படத்தில் ஹீரோவுக்கு சமமாக இவர் இருக்கிறார்..சிவா டான்ஸ் ஆடுகிறார்.இவரும்.சிவா காதலிக்கிறார்..இவரும்...இவருக்கு என்று தனியாக பாடல் இல்லை...கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன் படுத்தி நடித்து இருக்கிறார்.....காமெடியன்கள் தட்டு பாடு உள்ள இந்த நேரத்தில் இவர் வாய்ப்பை  சரியாக நல்ல எதிர்காலம் உண்டு...

டைரக்டர் பொன்ராம்-காமெடி சென்ஸ்  உள்ள வளர்ந்து வரும் ஒரு நல்ல ஹீரோ/ஒரு நல்ல நடிகர்/காமெடியன் இப்படி ஒரு நல்ல டீமை வைத்து கொண்டு இப்படி சொதபலான படத்தை எடுத்து உள்ள இவரை எல்லாம் உதவி இயக்குனாராக  வைத்து கொண்டு ராஜேஷ்  ஹிட் குடுத்து இருக்கிறார் என்றால் அவரை பாராட்டி தான் ஆக வேண்டும்....

என்னை பொறுத்த வரை  மக்களை முட்டாளாக  நினைத்து எடுக்கப்படும்  இது போன்ற திரைப்படங்கள் புறகணிக்க பட வேண்டும்..அப்போது தான் தரமான படங்களை நாம் தமிழ் சினிமாவில் காண முடியும்....

வியாழன், 5 செப்டம்பர், 2013

Twitter இல் நான் கண்ட ஆசிரியர் தினம் சம்பந்தமான Intersting ட்வீட்ஸ்...

பள்ளிக்கூடத்திலே ஆசிரியரைப் பார்த்தால் எப்படிப் பதுங்குவேனோ அதே போலத்தான் இப்போதும் பதுங்குகிறேன் #பயம் #மரியாதை #வெறுப்பு

பசங்களுக்கு தர்ம அடி கொடுத்துட்டு பொண்ணுங்களுக்கு ஒழுங்கா படின்னு அட்வைஸ் பண்ற சாருங்க வரம் மாணவிகளுக்கு :)

யாராச்சும் சத்துணவு டீச்சரை சொல்றீங்களாயா? ரெண்டு மூனுவாட்டி வரிசைல நின்னு முட்டை வாங்குனதைலாம் மறந்துட்டீங்களா?

ஆசிரியர் வேறு ஊருக்கு மாறுதல் பெற்று கிளம்புவதையும் “குரு பெயர்ச்சி” என்று சொல்லலாம்!

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

தொலைந்து போனவைகள்....

இன்றைய நாகரீக வளர்ச்சியில் தொலைத்து போன அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் இல்லாத தூரி ஆடும் ஒரு ஆனந்த விளையாட்டு...ஆனந்தமாக விளையாடும் சுஜெய்................

எங்கள் சொந்த ஊரான 63 வேலம்பாளையம் கன்னிமார் கருப்பராயன் கோவிலில் நாங்கள் பங்காளிகள் (எங்கள் அய்யாவின் அண்ணன் தம்பிகள் மொத்தம் 4 பெரியவர்களின் வாரிசுகள்) அநேகம் பேர் வருட வருடம் (ஆடி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை) சேர்ந்து பொங்கல் வைத்து சேவல் அறுத்து இந்த கோவிலிலேயே காலை முதல் மாலை வரை இருந்து பேசி சிரித்து மகிழ்ந்து இருப்போம் நாள் முழுவதும் ...

மிக அமைதியான இடம்....

பெரிய வெப்ப மரத்து காற்று...

ஒவொருவரும் ஒவொரு வேலையை செய்வார்கள்..

பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் சிலர்/கோழி சுத்தம் செய்ய சிலர்/தோட்டத்துக்கு சென்று மசாலா பொருகளை எல்லாம் அரைத்து வரும் சிறு வயது பெண்கள்/சமையலை கவனிக்கும் பெரியவர்கள் இப்படி ஒரே கொண்டாட்டமாக இருக்கும்......

அதன் பின் கிரிக்கெட் விளையாட்டு/பன்னான்கல்/தூரி ஆடுவது./பெரியவர்கள் சேர்ந்து அரட்டை அடிப்பது/ அவர்களின் வாழ்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் மிக ரசனை பொங்க சொல்வதை கேட்பது ஒரு மிக சுகமான அனுபவம் ...
அந்த அனுபவம் எல்லாம் அனுபவித்தால் தான் தெரியும்....
சுஜெய் போன்ற சின்ன பசங்களில் இருந்து எங்கள் அப்பா/அம்மா/பெரியப்பா/பெரியம்மா/சித்தப்பா/சித்தி/அண்ணன்/அண்ணி/அக்க/மச்சான்/தங்கச்சி/மாப்பிள்ளை/தம்பி/எல்லா குட்டிஸ் உட்பட அனைத்து வயதினரும் என்ஜாய் பண்ணும் நாளாக இருக்கும்...

நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் இந்த சுகமான அனுபவத்தை பெற ஒன்று கூடி கடவுள் பெயரால்..








தலைவா-சினிமா விமர்சனம்..

தலைவா-25/50

முதல் பாதி ஆஸ்திரேலியாவில் விஜயின் ன் அசத்தலான அறிமுகம்/ சந்தானம் மற்றும் நண்பர்கள்..அமலாபால் விஜய் காதல்/துள்ளலான பாடல்கள்/அருமையான AUSTRALIA LOCATION என்று மிகவும் கலகலப்பாகவே செல்கிறது...

இடைவேளைக்கு பிறகு தான் ஒவொரு காட்சியிலும் காமெடி களை கட்டுகிறது..சில காமெடி காட்சிகள் கீழே..

கூடி இருக்கும் மக்களை பார்த்து விஜய் கை அசைப்பது...

விஜய் பில்டர்களிடம் நான் பாத்துகிறேன் சொல்றது...

பஞ்சு அவர்தான் பாத்துகிறேன் சொல்றார்லே...நான் உங்களை நம்பறேன்னு சொல்றது.........

அமலா பால் போலிசாக வந்து வீர வசனம் பேசுவது...

விஜயை பார்த்து நீங்க தான் தம்பி எங்களை காப்பதணும்னு எல்லோரும் கண்ணீர் விடுவது......

கலவரம் நடக்கற எடத்துல விஜய் வந்து எல்லோரையும் காப்பாத்துவது.........

விஜய் ஊர்ல உள்ள எல்லா ரௌடிகளையும் கூப்பிட்டு இனிமேல் எந்த தப்பும் செய்யகூடாதுனு மிரட்டுவது..

தலைவா தலைவா பாடலில் முஸ்லீம் மற்றும் உலகத்துலே எந்தெந்த மதம் எல்லாம் இருக்கோ அத்தனை மதத்தை சேர்ந்த 80/90 வயசு பெரியவங்க எல்லோரும் கை எடுத்து கும்பிடுகிட்டே இருப்பது ...

இதை விட உச்சகட்ட காட்சி.
கடைசி சீனில் சந்தானம் பென்சில் மீசை வெச்சுகிட்டு வக்கீல் ஐயா உங்களை பார்க்க வந்திருகாங்கனு சொல்லும்போது விஜய் குறுந்தாடி வெச்சுகிட்டு ஜிப்பா போட்டுகிட்டு சிகப்பு சால்வை எடுத்து போர்த்துவது.............

ஆனா ஒன்னு பொது மக்களுக்கு தான் ரெண்டாவது பகுதி காமெடியா தெரியுது..விஜய் ரசிகருக்கு சரியான மாஸ் படம்...

விஜய் மிகவும் ப்ரெஷா இருக்கார்..டான்ஸ் எப்போவும் போல கலக்குறார்....அதுவும் முதல் தமிழ் பசங்க பாடல் சூப்பர்....அதனை அழகு/நளினம்......

சந்தானம் வழக்கம் போல ஒ.கே...

சத்யராஜ் கேரக்டர் மிக அருமை..நன்றாக செய்திருக்கிறார்..
அது போல சுரேஷ்/பொன்வண்ணன்/விஜய் கூட வரும் இளைஞர்கள் எல்லோரும்.....

இரண்டு விஜயும் தேவை இல்லாமல் இந்த கதையை எடுத்திருகிறார்கள்....பாட்சா போல படத்தை எடுக்கலாம் என்று முயற்சி செய்து இருக்கிறார்கள்..
இனிமேல் இந்த மாதிரி காட்பாதர் கதை எல்லாம் ரஜினி நடித்தால் கூட எடுபடாது என்பதே என் கருத்து...
இனிமல் ரெண்டு விஜயும் கதையில் கவனம் செலுத்த வேண்டும்...

Better LUCK NEXT TIME not only to 2 VIJAY's also to People like me who has soft corner for Vijay who expect good movies from him like nanban/thupaaki..
தங்க மீன்கள்-40/50.

விறுவிறுப்பான திரைக்கதை இல்லை/காமெடி சூப்பர் ஸ்டார்கள் நடிக்கவில்லை/திடீர் திருப்பங்கள் இல்லை...
ஆனாலும் படம் போர் அடிக்காமல் மென்மையாக செல்கிறது 

இரண்டு விசயத்தை தெளிவாக படம் தெளிவாக சொல்ல வருகிறது.....

ஒன்று தனியார் பள்ளிகளின் தரமான கல்வி என்கிற பேரில் நடக்கிற கொள்ளை....
இரண்டு அதன் மீதான மோகத்தால் நடுத்தர உண்மையாய் சம்பாதிக்க நினைக்கிற ஒருவன் படுகிற சிரமங்கள்...

இயக்குனர் ராம் நன்றாகவே நடித்து இருக்கிறார்.
அந்த குழந்தை அருமை..
ஏனைய நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகவே அளித்து இருக்கிறார்கள்.ராமின் அப்பா/மனைவி/அம்மாவாக வரும் ரோகினி எல்லோருமே...

படத்தில் ஒவொவொரு காட்சியும் அழகு.LOCATION தேர்வுக்கு ஒரு சபாஸ்....
இதற்கு உயிர் குடுக்கும் வகையில் யுவனின் இசை...
அதுவும் ஆனந்த யாழை பாடலை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட பரவசம்/சந்தோசம் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது.......
இளையராஜாவின் பாடலுக்கு பிறகு யுவனால் மட்டுமே இதை செய்ய முடிகிறது....
முன்னர் ராம் படத்தில் வரும் ஆரோரீரோ பாடலில் இதை உணர முடிந்தது...

படத்தில் ஆங்காங்கே ஒரு சில குறை இருந்தாலும்,
இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்...

இன்னொன்று குழந்தையை குழந்தையாய் வளருங்கள்...

அவர்களை அவர்கள் விருப்படி படிக்கச் செய்யுங்கள்...

எப்போதும் படி எழுத்து என்று டார்சர் செய்யாதீர்கள்...

அப்படி செய்யும் டார்சர் நீங்கள் பெருமையாக என் குழந்தை இது வரைக்கும் எழுதும் படிக்கும் என்று சொல்ல தான் பயன்படுமே தவற அந்த குழந்தைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை....