திங்கள், 24 நவம்பர், 2014

நாய்கள் ஜாக்கிரதை..சினிமா விமர்சனம்..

இந்த படத்தை பார்க்கும் போது தோன்றும் ஒரே விஷயம்....

சத்யராஜ் இந்த படத்தை தயாரிக்க பணம் கொடுத்ததோடு தன் கடமையை முடித்து கொண்டதாகவே தெரிகிறது...

ஏனென்றால் கொஞ்சம் உள்ள இறங்கி இந்த படத்தை பார்த்து இருந்தால் இந்த படத்தில் உள்ள ஏகப்பட்ட ஓட்டைகள் தெரிந்து(மிக சொதபலான திரைக்கதை ) அவர் அனுபவத்தின் மூலம் திருத்தி ஒரு சிறப்பான படத்தை கொடுத்து இருக்க முடியும் ..

பாசிடிவான விஷயங்கள்...

படத்தின் மேகிங்...உண்மையிலேயே சூப்பர்.படத்தின் மேகிங் எல்லாம் ரொம்ப ரிச்சாகவே இருக்கிறது..
படத்தின் போஸ்டர்...
நாய் தன் வித்தையை காட்டும் இடத்தில எல்லாம் வரும் பின்னணி  இசை...
சிபிராஜின் ஸ்க்ரீன்

படம் பார்க்கும் நமக்கே பல லாஜிக் தப்பு தெரிகிறது....படம் எடுப்பவர்களுக்கு  எப்படி  தெரியாமல்  போனது என்று தெரியவில்லை...

1)சிபிராஜ் இந்த படத்தில் ஒரு எஸ் ஐ என்று சொல்லுகிறார்..ஆனால் ஐ ஜி ரேஞ்சுக்கு எல்லாருக்கும் உத்தரவுயிடுகிறார்..

2)ஒரு சீனில் பார்த்தால் காலை கவட்டையில் வைத்து இருக்கிறார்.அடுத்த சீனில் பார்த்தல் ஓடுகிறார்...பின்பு மீண்டும் கவட்டையில்....

3) பட்ரோல் செல்லும் போலீஸ் எல்லாம் என்னமோ பிக்னிக் போவது மாதிரி சிறிது கொண்டும் கிண்டல் அடித்து கொண்டுமே இருக்கிறார்கள்...

4)சிபிராஜ் தான் காயம் அடைந்ததால் லீவில்  இருக்கிறார்..
எந்நேரமும் தண்ணி அடித்து கொண்டு இருக்கிறார்..(எதற்காக எபோதும் தண்ணியிலேயே இருக்கிறார் என்பது மறுபடியும் பெரிய கேள்வி)ஆனால் அவர் கூட வேலை செய்யும் போலீஸ் எதற்கு எப்போதும் இவர் கூடவே தண்ணி அடிக்கிறார்...

5)கதாநாயகி மழை பெய்யும் ஊரில் இருபதாக க்ளு கிடைத்து தான் ஊட்டி செல்கிறார்...ஆனால் போலீஸ் ஊட்டி செல்லும் போது மழை இல்லை..மழை பெய்ததற்கான ஈரம் கூட இல்லை...

6)மனைவி கடத்தப்பட்டவுடன் ஒரு பெரிய பதட்டம் இல்லாமல் எப்போதும் சிபிராஜ் இருக்கிறார்..அதுவும் ஜெயிலில் சென்று கைதியை சந்தித்து வரும் போது சிரித்து கொண்டு வருகிறார்...  

இதை எல்லாம் விட மிக பெரிய தவறு...நடிகர்கள் தேர்வு..
வில்லன் நடிகர் முதல் சிபிராஜ் நண்பர்கள்  வரை கொஞ்சம் தெரிந்த முகமாக இருந்து இருக்க வேண்டும்..அதிலும் வில்லனை மிக பெரிய அப்படக்கராக காமிகிரார்கள்..அதற்கு தகுந்த நடிகரை தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும்..

சும்மா நாயை மட்டும் வைத்து பிலிம் காட்டலாம் என்று நினைத்து உள்ளார்கள்...அது மிக பெரும் தவறு...

என்னை பொறுத்த வரை இந்த படத்தில் இவர்கள் கண்டிப்பாக வருமானம் பாத்து விடுவார்கள் ...ஆனால் நல்ல பெயர் கிடைக்குமா என்றால்  அது சந்தேகமே..

உண்மையிலேயே சிபிராஜுக்கு ராசி இல்லை என்று தான் தோன்றுகிறது...நல்ல உயரம்/டான்ஸ்  ஆடும்  திறமை / இயல்பாகவே வரும் காமெடி/கூடவே நம்மூரு நக்கல் ச்லங் எல்லாமே இருந்தும் இவர் இன்னும் ஒரு பெரிய ஹிட் குடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமே..

விஷால் /விக்ரம் பிரபு போன்ற உயரமான நடிகர்கள் எல்லாம் வெற்றி பெரும் வேளையில் நாம ஊர் காரர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நம்புவோம்..அதற்கு நல்ல கமெர்சியல் டைரக்டர் படத்தில் நடிக்க வேண்டும்...

All the best Sibiraj....