திங்கள், 10 மார்ச், 2014

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து  நில் --- 35/50.....

சமூகத்தில் உள்ள விதி மீறல்கள்/லஞ்சம்/பித்தலாட்டம்/தனிமனித ஒழுக்கமின்மை இவரை எல்லாம் சுட்டி காட்டி இருக்கும் ஒரு நல்ல திரைப்படம்......

முதலில் இப்படி ஒரு படத்தை எடுக்க சிந்தித்த இயக்குனர் சமுத்திரகனிக்கும் படத்தின் தயாரிபாளருக்கும் ஒரு நன்றி...

நேர்மையாக வாழ நினைக்கும் ஒரு இளைஞன் படும் பாடு தான் முதல் பாதி...பின் அவனது கோபத்தை வெளிப்படுத்தி மக்களையும் சேர்ப்பது பின் பாதி....

ஜெயம்ரவி -- இந்த பாத்திரத்துக்கு இவரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யாரையும் நினைத்து பார்க்க தோன்றவில்லை....அவ்வளவு எதார்த்தம் கலந்த அருமையான நடிப்பு...

சூரி தான் ஒரு காமெடியன் மட்டும் அல்ல ஒரு நல்ல நடிகரும் கூட என்று நிருபிக்க கிடைத்த படம் இது..சூரி இது போன்ற படங்களில் நடிப்பது அவருக்கு நல்ல பெயர் வாங்கி தரும்....

படத்தில் நடிகர் தேர்வு அருமை.சரத்குமார்,தம்பி ராமய்யா ,நீயா நானா கோபி,சுப்பு பஞ்சு,ஞானசம்பந்தம்,நமோ நாராயணன்,போலீஸ் அதிகரிகள வருபவர்கள்,அரசாங்க அதிகாரியாக வருபவர்கள்,பத்திர எழுத்தராக வரும் அந்த பெண் அனைவருமே படத்துக்கு பலம்...

படத்தின் முன்பாதி விறு விறு திரைக்கதை நம்மை  இடைவேளையின் போது ஒரு வித உணர்ச்சியில் பெருக்கில் வைக்கிறது..அடுத்து படம் எபோது ஆரம்பிப்பார்கள் என்று நம்மை ஏங்க வைக்கிறது...

ஆனால் பின் பாதி கொஞ்சம் சுமார் தான் என்று தோன்றுகிறது...அந்த இரண்டாவது ஜெயம் ரவி பாத்திர படைப்பு மிகுந்த குழப்பமானதாக உள்ளது...பின் பாதி திரைகதையை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்து இருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி பெற்று இருக்கும்...

இருந்தாலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்....

நாம் கொஞ்சம் சுய ஒழுக்கத்துடன் இருப்போம்...சுய ஒழுக்கம் தவறும் தறுதலைகளை ஆதரிக்காமல்(அது என்ன காரணமாக இருந்தாலும்) இருப்போம்...