திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அஞ்சான்-திரைவிமர்சனம்......

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு திரைவிமர்சனம்......

அஞ்சான்- முதலில் எல்லோரும் சொல்வதை போல இது ஒரு மொக்கை படமாக எனக்கு படவில்லை..இது ஒரு mass masala entertainer.
அதிலும் இரண்டாம் பகுதி நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது....

ஒரு ஒரு மாற்றம் செய்து இருந்தால் இது மிக பெரிய வெற்றி படமாக இருந்து இருக்கும்...

அது சூர்யா...

இந்த படம் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்...
சூர்யா/விக்ரம் எல்லாம் மாஸ் ஹீரோ இல்லை.
அவர்கள் நல்ல performers..
நீங்கம் சிங்கம்/காக்க காக்க/சாமி படத்தை பற்றி கேட்கலாம்.

அது போலீஸ் கதை அதனால் போலீஸ் மிடுக்கு நன்றாக இவர்களால் கொண்டு வரப்பட்டதன் மூலமாக அந்த படங்கள் ஈடுபட்டது...

விஜய்/அஜித் மாதிரி மாஸ் ஹீரோ நடித்து இருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக இருந்து இருக்கும்...
குறிப்பாக அஜித்துக்கு எற்ற படம்...

லிங்குசாமி சூர்யாவை தவிர அனைத்து நடிகர்/நடிகைகளை எல்லாம் நன்றாகவே தேர்வு செய்து இருந்தார்...
அனைவரும் மிக சிறப்பாகவே தனது பங்கை செய்து இருந்தார்கள்...
ஹீரோ  தேர்வில் கவனம் செலுத்தி இருந்தால் அவருக்கு வருமானத்துடன் நல்ல பெயரும் கிடைத்து இருக்கும்.....

சூர்யா - இந்த படத்தில் சூர்யா ஒரு வில்லனை பார்த்து ஒரு கேள்வி கேட்பார்"காசை சுண்டி விட்டால் நீ சந்துரு ஆக முடியாது" .அதே வசனம் தான் உங்களுக்கும் பொருந்தும் பிரதர்..தாடி வெச்சுகிட்டு ஹேர் ஸ்டைல் கொஞ்சம் மாற்றி விட்டால் நீங்கள் உங்களை ரஜினியாக நினைத்து கொண்டு நடித்து இருக்கீர்கள்.. அதை பார்க்கும் பொது சுள்ளான் படத்தில் தனுஷ் செய்த அலப்பறைகள் தான் தோன்றி தோன்றி சிரிப்பு வருகிறது...
நமக்கு எல்லாம் மாஸ் ஹீரோ செரிபட்டு வராது..கவனம்....
மற்றபடி இந்த படத்தில் சூர்யா நடிப்பு அருமை...

In all Anjaan is not at all a BAD MOVIE-Can watch once for a racy screenplay in the second half..