வியாழன், 25 ஜூன், 2015

ஸ்ரீ ராஜ லிங்கேஸ்வரர் ஆலயம்...

ஸ்ரீ ராஜ லிங்கேஸ்வரர் ஆலயம்...
-----------------------------------------------------------
கடந்த வாரம் திருசெந்தூர் சென்ற போது ரமேஷ் அண்ணன் மூலம் ஒரு ஆலயத்தை பற்றி கேள்விபட்டேன்...
டிவியில் இந்த ஆலயத்தின் சிறப்பை பற்றி அவருடைய சித்தப்பா ஒருவர் சொன்னதாக சொன்னார்..

படத்தில் காணும் ராஜ லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு மிக சிறிய ஆலயம் .. திருசெந்தூரில் இருந்து 50 கி மீ தொலைவில்  கோட்டை கருங்குளம் என்று ஊரில்(வள்ளியூருக்கு அருகில்) அமைந்து உள்ளது..

அங்கு உள்ள கல்வெட்டில் சில விவரங்கள் பதிய பட்டுஉள்ளது
இந்த ஆலயம் 2000 ஆண்டு பழமையானது...
இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் முன்னோர்கள் செய்து பாவம் முதல் அவர்கள் செய்து பாவம் வரை விமோசனம் பெறுகிறார்கள் என்பது ஐதீகம்...
கல்யாணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபாடும் போது திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்...

திருசெந்தூர் செல்லும் போது மறவாமல் இந்த ஆலயத்து சென்று வழிபடுங்கள் .......
கோவில் பூட்டி இருந்தால் அங்கேயே குருக்களின் தொலைபேசி ஏன் உள்ளது.அழைத்தால் வந்து பூஜை செய்து தருகிறார்....




செவ்வாய், 9 டிசம்பர், 2014

காவிய தலைவன்-விமர்சனம்...

காவிய தலைவன்-விமர்சனம்...

இயக்குனர் வசந்தபாலன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...

நீங்கள் மக்கள் எல்லாம் ரசிக்கிற மாதிரி ஒரு ஜனரஞ்சகமான படம் எடுங்க.....யாரும் கோவிச்சிக்க மாட்டாங்க...

அதை விட்டுட்டு வித்தியாசமான படம் தான் எடுப்பேன் சொல்லிவிட்டு நீங்களும் கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும் ரசிக்கிற மாதிரி இல்லை....அது தேவையும் இல்லை...

முதல் உதாரணம் அரவான்...இப்பொது காவிய தலைவன்...

இது 1947 முந்திய கதை...

ஆனால் படத்தில் வரும் இசை/நடன அசைவுகள்/நடிப்பு (Body language-சில இடங்களில்)எல்லாமே இந்த நவீன காலத்தை போலவே இருக்கிறது

முக்கியமாக சித்தார்த் ஜாமீன் மகளை பார்க்க போகும் காட்சியில் Peter England பேண்ட் அணிந்து  செல்கிறார்/ French kiss அடிக்கிறார் / துள்ளி துள்ளி குதித்து கமல் இந்தியன்/அபூர்வ  சகோதரர்கள் படத்தில் போட்ட பிரேக் டான்ஸ் ஸ்டெப் எல்லாம் போடுகிறார்...

விறுவிறுப்பு இல்லாத/எங்கெங்கோ பயணிக்கும் /அடிகடி தடுமாறும் திரைக்கதை கொண்ட திரைப்படம் எப்படி வெற்றி பெறும்????????????? ...

இந்த படத்திற்கு எங்கள் கேப்டன் பானுப்ரியாவுடன் நடித்த காவிய தலைவன் எவ்வளவோ பரவாயில்லை..

திங்கள், 24 நவம்பர், 2014

நாய்கள் ஜாக்கிரதை..சினிமா விமர்சனம்..

இந்த படத்தை பார்க்கும் போது தோன்றும் ஒரே விஷயம்....

சத்யராஜ் இந்த படத்தை தயாரிக்க பணம் கொடுத்ததோடு தன் கடமையை முடித்து கொண்டதாகவே தெரிகிறது...

ஏனென்றால் கொஞ்சம் உள்ள இறங்கி இந்த படத்தை பார்த்து இருந்தால் இந்த படத்தில் உள்ள ஏகப்பட்ட ஓட்டைகள் தெரிந்து(மிக சொதபலான திரைக்கதை ) அவர் அனுபவத்தின் மூலம் திருத்தி ஒரு சிறப்பான படத்தை கொடுத்து இருக்க முடியும் ..

பாசிடிவான விஷயங்கள்...

படத்தின் மேகிங்...உண்மையிலேயே சூப்பர்.படத்தின் மேகிங் எல்லாம் ரொம்ப ரிச்சாகவே இருக்கிறது..
படத்தின் போஸ்டர்...
நாய் தன் வித்தையை காட்டும் இடத்தில எல்லாம் வரும் பின்னணி  இசை...
சிபிராஜின் ஸ்க்ரீன்

படம் பார்க்கும் நமக்கே பல லாஜிக் தப்பு தெரிகிறது....படம் எடுப்பவர்களுக்கு  எப்படி  தெரியாமல்  போனது என்று தெரியவில்லை...

1)சிபிராஜ் இந்த படத்தில் ஒரு எஸ் ஐ என்று சொல்லுகிறார்..ஆனால் ஐ ஜி ரேஞ்சுக்கு எல்லாருக்கும் உத்தரவுயிடுகிறார்..

2)ஒரு சீனில் பார்த்தால் காலை கவட்டையில் வைத்து இருக்கிறார்.அடுத்த சீனில் பார்த்தல் ஓடுகிறார்...பின்பு மீண்டும் கவட்டையில்....

3) பட்ரோல் செல்லும் போலீஸ் எல்லாம் என்னமோ பிக்னிக் போவது மாதிரி சிறிது கொண்டும் கிண்டல் அடித்து கொண்டுமே இருக்கிறார்கள்...

4)சிபிராஜ் தான் காயம் அடைந்ததால் லீவில்  இருக்கிறார்..
எந்நேரமும் தண்ணி அடித்து கொண்டு இருக்கிறார்..(எதற்காக எபோதும் தண்ணியிலேயே இருக்கிறார் என்பது மறுபடியும் பெரிய கேள்வி)ஆனால் அவர் கூட வேலை செய்யும் போலீஸ் எதற்கு எப்போதும் இவர் கூடவே தண்ணி அடிக்கிறார்...

5)கதாநாயகி மழை பெய்யும் ஊரில் இருபதாக க்ளு கிடைத்து தான் ஊட்டி செல்கிறார்...ஆனால் போலீஸ் ஊட்டி செல்லும் போது மழை இல்லை..மழை பெய்ததற்கான ஈரம் கூட இல்லை...

6)மனைவி கடத்தப்பட்டவுடன் ஒரு பெரிய பதட்டம் இல்லாமல் எப்போதும் சிபிராஜ் இருக்கிறார்..அதுவும் ஜெயிலில் சென்று கைதியை சந்தித்து வரும் போது சிரித்து கொண்டு வருகிறார்...  

இதை எல்லாம் விட மிக பெரிய தவறு...நடிகர்கள் தேர்வு..
வில்லன் நடிகர் முதல் சிபிராஜ் நண்பர்கள்  வரை கொஞ்சம் தெரிந்த முகமாக இருந்து இருக்க வேண்டும்..அதிலும் வில்லனை மிக பெரிய அப்படக்கராக காமிகிரார்கள்..அதற்கு தகுந்த நடிகரை தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும்..

சும்மா நாயை மட்டும் வைத்து பிலிம் காட்டலாம் என்று நினைத்து உள்ளார்கள்...அது மிக பெரும் தவறு...

என்னை பொறுத்த வரை இந்த படத்தில் இவர்கள் கண்டிப்பாக வருமானம் பாத்து விடுவார்கள் ...ஆனால் நல்ல பெயர் கிடைக்குமா என்றால்  அது சந்தேகமே..

உண்மையிலேயே சிபிராஜுக்கு ராசி இல்லை என்று தான் தோன்றுகிறது...நல்ல உயரம்/டான்ஸ்  ஆடும்  திறமை / இயல்பாகவே வரும் காமெடி/கூடவே நம்மூரு நக்கல் ச்லங் எல்லாமே இருந்தும் இவர் இன்னும் ஒரு பெரிய ஹிட் குடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமே..

விஷால் /விக்ரம் பிரபு போன்ற உயரமான நடிகர்கள் எல்லாம் வெற்றி பெரும் வேளையில் நாம ஊர் காரர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நம்புவோம்..அதற்கு நல்ல கமெர்சியல் டைரக்டர் படத்தில் நடிக்க வேண்டும்...

All the best Sibiraj....

செவ்வாய், 28 அக்டோபர், 2014

பூம்பாறை முருகன் கோவில்...

கொடைக்கானல் மலையில் கொடைக்கானலில் இருந்து மேலும் ஒரு 25 கிலோ மீட்டர் சென்றால் அமைத்து உள்ள கிராமம் பூம்பாறை.
இங்கு தான் இந்த முருகன் கோவில் அமைந்து உள்ளது....  
இங்கு குழந்தை வேலப்பராக காட்சி தருகிறார்...

இந்த சிலையும் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாசானத்தால்(பழனி மலையில் உள்ள முருகரை போலவே)செய்து பிரதிஷ்டை செய்ததாக கூறபடுகிறது....

பழனி மலையில் உள்ள முருகரை போலவே இங்கும் காட்சி தருகிறார்.... பழனிமலை கோவிலின் நிர்வாகத்தில் தான் இந்த கோவிலும் உள்ளது.....

மிக ரம்மியமான/அமைதியான சூழ்நிலையில் அதிகம் கூட்டம் இல்லாத இந்த கோவிலில் முருகரை வழிபாடு செய்வது மனதுக்கு மிக நிறைவாக உள்ளது....

அதிலும் நாங்கள் சென்ற போது மிக லேசாக மழை தூறிக்கொண்டு இருந்ததால் மனதில் இன்னும் கொஞ்சம் பரவசம் கொண்டு இருந்தது....

இங்கு உள்ள பூசாரியிடம் பேசியபோது  அவர் சொன்னது..
இந்த கோவிலில் தை பூசத்தை ஒட்டி நடக்கும் திருவிழா மிக சிறப்பாக இருந்கும் என்று சொன்னார்.மேலும் இந்த கோவிலுக்கு வருவதற்கே முருகனின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே வர முடியும் என்றும் பலபேர் வாசல் வரை வந்து உள்ளே வந்து முருகனை தரிசிக்க முடியாமல் திரும்பி சென்று உள்ளதாகவும் கூறினார்....

வாய்ப்பு இருந்தால் நீங்களும் சென்று இந்த முருகரை அவசியம் வழிபடுங்கள்.........








.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜீவா -திரை விமர்சனம்...

ஜீவா -திரை விமர்சனம்...

சுசீந்திரன் மீண்டும் ஒரு முறை தன்னை நல்ல இயக்குனர் என்று காட்டி உள்ள படம்....

என்ன தான் படத்தின் கரு கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஒரு ஜாதியினரின் ஆதிக்கம் அதனால் வாய்ப்பு பெறாமல் துடிக்கும் மற்ற பிரிவினரின் வலி மற்றும் இதனால் விளையாட்டில் நமது மாநிலம் பின்தங்கி இருப்பதை காட்டுவது என்றாலும் படத்தை மிக சுவாரசியமாக கொண்டு சென்றதற்கு ஒரு சபாஷ்......

கூடவே காதிலிக்க ஏற்றது பள்ளி பருவம் அல்ல..மற்றும் காதலில் பிரிவு ஏற்படும் போது அதையே நினைத்து வருதப்பட்டுகொண்டு இருக்காமல் வேறு விசயங்களில் கவனத்தை திருப்பி வாழ்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்....

விஷ்ணு இந்த கதைக்கு மிக பொருத்தமான தேர்வு....
மிக எதார்த்தமான நடிப்பு...வாழ்த்துக்கள்...

மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பும் நன்று...
ஸ்ரீ திவ்யா/ அன்னக்கிளி புகழ்(??) லக்ஷ்மணன்/சூரி/விஷ்ணுவின் அப்பா/வாட்ச்மேன்/கோச்/குழந்தை நட்சதிரங்கள் மற்றும் அனைவருமே நல்ல நடிப்பை கொடுத்து உள்ளார்கள்...

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு நடிகர் சார்லி....கொஞ்ச நாள் திரையில் முகம் காட்டாமல் இருந்தவரை இந்த படத்தில் பார்த்தது மகிழ்ச்சி....
இவரை போன்ற நடிகர்களை ஏன் பெரிய இயக்குனர்கள் எல்லாம் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை..

ஆக மொத்தத்தில் இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்....






திங்கள், 18 ஆகஸ்ட், 2014

அஞ்சான்-திரைவிமர்சனம்......

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு திரைவிமர்சனம்......

அஞ்சான்- முதலில் எல்லோரும் சொல்வதை போல இது ஒரு மொக்கை படமாக எனக்கு படவில்லை..இது ஒரு mass masala entertainer.
அதிலும் இரண்டாம் பகுதி நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது....

ஒரு ஒரு மாற்றம் செய்து இருந்தால் இது மிக பெரிய வெற்றி படமாக இருந்து இருக்கும்...

அது சூர்யா...

இந்த படம் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்...
சூர்யா/விக்ரம் எல்லாம் மாஸ் ஹீரோ இல்லை.
அவர்கள் நல்ல performers..
நீங்கம் சிங்கம்/காக்க காக்க/சாமி படத்தை பற்றி கேட்கலாம்.

அது போலீஸ் கதை அதனால் போலீஸ் மிடுக்கு நன்றாக இவர்களால் கொண்டு வரப்பட்டதன் மூலமாக அந்த படங்கள் ஈடுபட்டது...

விஜய்/அஜித் மாதிரி மாஸ் ஹீரோ நடித்து இருந்தால் இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக இருந்து இருக்கும்...
குறிப்பாக அஜித்துக்கு எற்ற படம்...

லிங்குசாமி சூர்யாவை தவிர அனைத்து நடிகர்/நடிகைகளை எல்லாம் நன்றாகவே தேர்வு செய்து இருந்தார்...
அனைவரும் மிக சிறப்பாகவே தனது பங்கை செய்து இருந்தார்கள்...
ஹீரோ  தேர்வில் கவனம் செலுத்தி இருந்தால் அவருக்கு வருமானத்துடன் நல்ல பெயரும் கிடைத்து இருக்கும்.....

சூர்யா - இந்த படத்தில் சூர்யா ஒரு வில்லனை பார்த்து ஒரு கேள்வி கேட்பார்"காசை சுண்டி விட்டால் நீ சந்துரு ஆக முடியாது" .அதே வசனம் தான் உங்களுக்கும் பொருந்தும் பிரதர்..தாடி வெச்சுகிட்டு ஹேர் ஸ்டைல் கொஞ்சம் மாற்றி விட்டால் நீங்கள் உங்களை ரஜினியாக நினைத்து கொண்டு நடித்து இருக்கீர்கள்.. அதை பார்க்கும் பொது சுள்ளான் படத்தில் தனுஷ் செய்த அலப்பறைகள் தான் தோன்றி தோன்றி சிரிப்பு வருகிறது...
நமக்கு எல்லாம் மாஸ் ஹீரோ செரிபட்டு வராது..கவனம்....
மற்றபடி இந்த படத்தில் சூர்யா நடிப்பு அருமை...

In all Anjaan is not at all a BAD MOVIE-Can watch once for a racy screenplay in the second half..

செவ்வாய், 13 மே, 2014

திருச்சியை சுற்றி உள்ள பழமையான கோவில்களை பற்றியது

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே எழுத வேண்டும் என்று நினைத்து இருந்த பதிவு இது...

திருச்சியை சுற்றி உள்ள பழமையான கோவில்களை பற்றியது...

முதலில் திருச்சி சென்னை பைபாஸில் உள்ள திருபட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்....

தமிழ்நாட்டில் பிரம்மாவிற்கு என்று தனியாக சன்னதி உள்ள கோவில் இது..இங்கு சென்று உங்கள் ஜாதகத்தை பிரம்மன்  சன்னதியில் வைத்து பூஜை உங்கள் தலையெழுத்தையே பிரம்மன் மாற்றுவார் என்பதும்/ அதே போல் இங்கு செல்வதற்கே ஒரு நேரம் காலம் வரும் போது தான் செல்ல முடியும் என்பதும் நம்பிக்கை...

2வது என் அனுபவம் கூட.....பத்மா இந்த கோவிலை பற்றி ஒரு வருடத்துக்கு முன்பே டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பின் நாங்கள் செல்லலாம் என்று வெகுநாள் முயற்சித்தோம் ஆனால் ஒரு மாதத்திற்கு முன் தான் செல்ல முடிந்தது..ஆனால் என் மூலம் இந்த கோவிலை பற்றி கேள்விபட்டவர்கள் நிறைய பேர்  வெகு நாட்களுக்கு முன்பே சென்று வந்துள்ளார்கள்....

அதே போல் திருபட்டூர் செல்லும் வழியிலேயே இன்னொரு பழமையான கோவில் உள்ளது...அது அரங்கேற்ற அய்யனார் கோவில்..
பொதுவாக அய்யனார் எப்போதுமே அருவாளுடன் தான் காட்சி அளித்து பார்த்து இருகிறோம்..இங்கு ஓலை சுவடியுடன் காட்சி தருகிறார்...
சிறு பிள்ளைகள் இங்கு சென்று ஒரு நோட் புத்தகம் வாங்கி பூஜை செய்து அங்கேயே சிலவற்றை எழுதினால் படிப்பு நன்றாக வரும் என்பதும்/கல்யாணம் ஆகாதவர்கள் இங்கு வந்து  வழிபட்டு சென்றால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை....

திருபடுரில் இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒரு 3000 ஆண்டு பழைமையான ஒரு சிவன் கோவில்...
ஊட்டத்தூர் சுத்த ரத்ன ஈஸ்வரர் திருக்கோவில்...
இந்த கோவிலின் சிறப்புகள் சில...

ஆசியாவில் எங்குமே இல்லாத பஞ்ச பூதன கல்லினால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை இங்கு உள்ளது...
கிட்னி சம்பதமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சிலையின் அருகில் இருந்து வழிபட்டு இங்கு உள்ள கிணறில் உள்ள தீர்த்தத்தை பருகினால் கிட்னி பிரச்சினைகள் தீரும் (அந்த சிலை









யின் உள்ள Vibration காரணமாக ) என்று சொல்லபடுகிறது...

அதே போல் கொடிமரத்தின் அருகே மேல் கூரையில் 12 நவகிரகங்களும்/27 நட்சத்திரங்களும்/12 ராசிகளும் செதுக்பட்டு உள்ளது சிறப்பு....

வாய்ப்பு இருப்பவர்கள் இங்கே சென்று வாருங்கள் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்....

சில படங்களையும் இங்கு உங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன்