செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 -சில நெகிழ்ச்சியான தருணங்கள்..

2013 -சில நெகிழ்ச்சியான தருணங்கள்..

2013 சோதனையான ஆண்டாக இருந்தாலும் நிறைய நெகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டது..

** அப்பாவுக்கு விபத்து ஏற்பட்ட உடனே வந்து தோளோடு தோளாக நின்ற உறவினர்களின் வருகை உண்மையிலேயே தைரியத்தை கொடுத்தது...
நமக்கு ஒரு பிரிச்சனை வரும் போது நமக்கு கிடைக்கும் ஆதரைவையே பொறுத்தே நாம் சமுகத்தை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோமா என்று தெரிய வரும்..அப்பாவின் விபத்து நாம் சமுதாயத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டியது..


** சுஜெயின் பள்ளி பருவ தொடக்கம்(LKG)

** எங்கள் Royale Process CTP நிறுவனத்தின் Digital Printing தொடக்கம்

** மதன் ஆர்த்தி திருமணம்

** நாங்கள் இன்னும் சின்ன பையனாகவே நினைத்து கொண்டு இருக்கும் கார்த்தியின் பொறியாளர் ஆவதற்கு கல்லூரி சென்றது

** இரண்டு முறை திருப்பதி பயணம்.அதில் ஒரு முறை திருமலை நடந்தே சென்றது புது அனுபவம்

** குலதெய்வம் ஆண்டுவிழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க ஏனைய பங்காளி வீடுகளுக்கு சென்றது புது அனுபவம்
 
** இடுவம்பாளையத்தில் பட்டகாரர்கள் சார்பாக கட்டி வரும் புது திருமண மண்டபத்திற்கான கூட்டங்களில் பங்கெடுத்தது....

இப்படி புது விதமான அனுபவங்களையும் பெற்று கொடுத்தது 2013....

2013

2013
----------

இந்த 2013ம் ஆண்டு எனக்கு தனிப்பட்ட முறையில் கொஞ்சம் சோதனையான ஆண்டாகவே அமைந்தது...

அப்பாவுக்கு ஏற்பட்ட விபத்து அதை தொடர்ந்து சிகிச்சைக்கான அலைச்சல்கள்......
இந்த விபத்தை சட்டபூர்வமாக சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்...

எப்படியாவது அடுத்தவன் காசை அபகரிக்க வேண்டும் என்று கூட்டாக திரியும் மனிதர்களை நிறைய சந்தித்தது.......

மேலும் ஒரு  சில்லறைதனமான செயல்பாடு என்னை மிக வும் கோபமுற செய்தது அதை விட அந்த சில்லரைதனத்தை எல்லோரும் இணைந்து ஆதரவு குடுப்பது அதை விட கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது.....

இந்த சோதனைகள் எல்லாம் இருந்தாலும் எதையும் தாங்கும் மனத்திடத்தையும் அதை எதிர் கொள்ளும் துணிச்சலையும் மிக ஆழமாக என்னுள் விதைத்து விட்டே விடை பெறுகிறது இந்த 2013..........

தீயவைகளை எல்லாம் கடவுள் பார்த்துகொள்வார்  என்ற மீண்டும் ஒரு முறை நம்பிக்கை வைக்கிறேன்.
2014 மிக அருமையான ஆண்டாக அமையும் என்று உறுதியாக  நம்புகிறேன்...
  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

ஆம் ஆத்மியை பற்றிய என் பார்வை

ஆம் ஆத்மி இது வரை உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை விட தெளிவாக ஆட்சி மற்றும் அரசியல் செய்யும் என்பதே என் கருத்து..

அதற்கு உதாரணம் அவர்கள் ஆட்சி அமைக்க முன்வந்ததும் அதற்கு அவர்கள் செய்த செயலும் சொன்ன காரணங்களும்.. அவர்கள் கட்சி MLA கள் பலர் ஆட்சி அமைக்க வற்புறுத்தியதாக ஒரு செய்தி பரவியது.இருந்தாலும் அதை சொல்லாமல் மக்களிடம் கேட்டு அதனால் ஆட்சி அமைக்க
முடிவு செய்ததாக சொன்னார்கள்..

இதனால் அவர்கள் மேல் வைக்கப்பட்ட இரண்டு விமர்சனகளை (ஆட்சி அமைக்காமல் பயந்து ஓடுகிறார்கள் மற்றும் இன்னொரு தேர்தல் வரவைப்பது மூலம் மக்கள் பணத்தை வீணடிகிரர்கள்) உடைத்தார்கள்.கூட போனஸாக தாங்கள் மக்களிடம் கேட்டு தான் முக்கிய முடிவு எடுபதாகவும் ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.....

இதுவே மிக சாதுரியமான செயல்....

அது போல இப்போது இருக்கும் அரசியல்கட்சிகள் மிக சோம்பேறித்தனமாகவும்/தனக்கு ஆதாயம் தேடியும்  தான் பணி புரிந்து வருகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சியினர் முதல் முறையாக ஆட்சி பணி செய்வதினால்(இவர்கள் அனைவரும் படித்தவர்கள் என்பது கூடுதல் திறன் ) கண்டிப்பாக மிக சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள் அதனால் மக்கள் பயன் பெறபோகிரார்கள் என்பதே என் பார்வை.

இப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்ததன் விளைவை பின்னால் கண்டிப்பாக அனுபவிக்க இருக்கிறது.

ஆம் அத்மி தங்கள் ஆட்சியில் ஏதாவது சிரமம் ஏற்படும் போது உடனே முந்தய ஆட்சியின் ஊழல் விசாரணை என்ற பேரில் காங்கிரஸ்காரர்களை கைது செய்வார்கள்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தாலும் ஆம் ஆத்மிக்கு அனுதாப ஆதாயம்...
சும்மா இருந்தாலும் ஆம் ஆத்மிகு அதிரடி நடவடிக்கை ஆதாயம்..

இப்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்ததன் விளைவை பின்னால் கண்டிப்பாக அனுபவிக்க இருக்கிறது.

என்னை பொறுத்த வரை அரவிந்த் கேஜிர்வால் கலைஞரை போல ராஜதந்திரம் மற்றும் திறமை வாய்ந்தவராகவே தெரிகிறார். கலைஞர் அவருடைய சுயநலத்திற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஒவொரு விசயத்திலும்  ஆதாயம் தேட முற்பட்டதினால் தான் அவரால் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போனது.
தன் திறமையை அரவிந்த் கேஜிர்வால் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்தே அவர் மக்கள் மனதில் நிலைப்பாரா இல்லையா என்பது தெரியும்

ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஏழுமலையானை தரிசிக்க ஒரு அமைதியான ஆனந்த பயணம்..














9 கீ மீ...
3550 படிகள்
ஏழுமலை நடந்து கடந்து ஏழுமலையானை தரிசிக்க ஒரு அமைதியான ஆனந்த பயணம்..
வழி  நெடுகிலும் அனைத்து வயதிலும்(6 மாத குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை)/அனைத்து மொழி பேசும் மனிதர்களையும்.
வித்தியாசமான வழிபாடுகளையும் காண முடிந்தது...
..
ஒவ்வொரு படியிலும் மஞ்சள் /குங்குமும் வைத்து செல்பவர்கள்.............
ஒவ்வொரு படியிலும் சூடம் ஏற்றி செல்பவர்கள்......
ஒவ்வொரு செட் படி ஆரம்பிக்கும் போது  முட்டி போட்டு செல்பவர்கள் .......
ஒவ்வொரு செட் படி ஆரம்பிக்கும் போது விழுந்து வணங்கி செல்பவர்கள்...
கோவிந்தா கோவிந்தா என்று பாடி கொண்டு செல்பவர்கள்...

கைகுழந்தையை சுமது கொண்டு வருபவர்கள்..
தாவி கொண்டு வேகமாக 5/6 வயது சின்ன பிள்ளைகளை கவனமாக பார்த்து போக சொல்லி கொண்டே ஓடும் பெற்றோர்ர்கள்
நடக்க முடியாத வயதான அம்மாக்களை இன்னும் கொஞ்ச தூறும் தான் என்று  ஆறுதல் வார்த்தை சொல்லி ஊக்கபடுத்திகொண்டே அழைத்து செல்லும் மகள்கள்/மகன்கள்.....
கணவர்களின் தோளை பிடித்து தொங்கி கொண்டு வரும் மனைவிமார்கள்.....
நடக்க முடியாதவர்களுக்கு வேண்டும் மென்றே இன்னும் சிரமமான  பாதை தான் அதிகம் என்று பயமுறுத்தி கொண்டே செல்லும் நண்பர்கள்..

இப்படி பல விதமான மனிதர்களையும்/ சம்பவங்களையும்/வழிபாடுகளையும் பார்த்து கொண்டு ஒன்பது அவதாரங்களை வணங்கி கொண்டும் வழியில் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு கொண்டு செல்வது ஒரு சுகமான அனுபவம்.
அதுவும் நாங்கள் செல்லும் போது மழை  வருவது போல் இருதததால் ஜில்லென்ற காற்றை அனுபவித்து கொண்டே சென்றது வார்த்தையால் விவரிக்க முடியாது..

நீங்கள் முடித்தால் ஒரு முறை இந்த அனுபவத்தை உணருங்கள்.....