செவ்வாய், 28 அக்டோபர், 2014

பூம்பாறை முருகன் கோவில்...

கொடைக்கானல் மலையில் கொடைக்கானலில் இருந்து மேலும் ஒரு 25 கிலோ மீட்டர் சென்றால் அமைத்து உள்ள கிராமம் பூம்பாறை.
இங்கு தான் இந்த முருகன் கோவில் அமைந்து உள்ளது....  
இங்கு குழந்தை வேலப்பராக காட்சி தருகிறார்...

இந்த சிலையும் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாசானத்தால்(பழனி மலையில் உள்ள முருகரை போலவே)செய்து பிரதிஷ்டை செய்ததாக கூறபடுகிறது....

பழனி மலையில் உள்ள முருகரை போலவே இங்கும் காட்சி தருகிறார்.... பழனிமலை கோவிலின் நிர்வாகத்தில் தான் இந்த கோவிலும் உள்ளது.....

மிக ரம்மியமான/அமைதியான சூழ்நிலையில் அதிகம் கூட்டம் இல்லாத இந்த கோவிலில் முருகரை வழிபாடு செய்வது மனதுக்கு மிக நிறைவாக உள்ளது....

அதிலும் நாங்கள் சென்ற போது மிக லேசாக மழை தூறிக்கொண்டு இருந்ததால் மனதில் இன்னும் கொஞ்சம் பரவசம் கொண்டு இருந்தது....

இங்கு உள்ள பூசாரியிடம் பேசியபோது  அவர் சொன்னது..
இந்த கோவிலில் தை பூசத்தை ஒட்டி நடக்கும் திருவிழா மிக சிறப்பாக இருந்கும் என்று சொன்னார்.மேலும் இந்த கோவிலுக்கு வருவதற்கே முருகனின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே வர முடியும் என்றும் பலபேர் வாசல் வரை வந்து உள்ளே வந்து முருகனை தரிசிக்க முடியாமல் திரும்பி சென்று உள்ளதாகவும் கூறினார்....

வாய்ப்பு இருந்தால் நீங்களும் சென்று இந்த முருகரை அவசியம் வழிபடுங்கள்.........








.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜீவா -திரை விமர்சனம்...

ஜீவா -திரை விமர்சனம்...

சுசீந்திரன் மீண்டும் ஒரு முறை தன்னை நல்ல இயக்குனர் என்று காட்டி உள்ள படம்....

என்ன தான் படத்தின் கரு கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் ஒரு ஜாதியினரின் ஆதிக்கம் அதனால் வாய்ப்பு பெறாமல் துடிக்கும் மற்ற பிரிவினரின் வலி மற்றும் இதனால் விளையாட்டில் நமது மாநிலம் பின்தங்கி இருப்பதை காட்டுவது என்றாலும் படத்தை மிக சுவாரசியமாக கொண்டு சென்றதற்கு ஒரு சபாஷ்......

கூடவே காதிலிக்க ஏற்றது பள்ளி பருவம் அல்ல..மற்றும் காதலில் பிரிவு ஏற்படும் போது அதையே நினைத்து வருதப்பட்டுகொண்டு இருக்காமல் வேறு விசயங்களில் கவனத்தை திருப்பி வாழ்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்....

விஷ்ணு இந்த கதைக்கு மிக பொருத்தமான தேர்வு....
மிக எதார்த்தமான நடிப்பு...வாழ்த்துக்கள்...

மற்றும் அனைத்து நடிகர் நடிகைகளின் நடிப்பும் நன்று...
ஸ்ரீ திவ்யா/ அன்னக்கிளி புகழ்(??) லக்ஷ்மணன்/சூரி/விஷ்ணுவின் அப்பா/வாட்ச்மேன்/கோச்/குழந்தை நட்சதிரங்கள் மற்றும் அனைவருமே நல்ல நடிப்பை கொடுத்து உள்ளார்கள்...

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு நடிகர் சார்லி....கொஞ்ச நாள் திரையில் முகம் காட்டாமல் இருந்தவரை இந்த படத்தில் பார்த்தது மகிழ்ச்சி....
இவரை போன்ற நடிகர்களை ஏன் பெரிய இயக்குனர்கள் எல்லாம் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரிய வில்லை..

ஆக மொத்தத்தில் இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்....