வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

பண்ணையாரும் பத்மினியும்...Film to celebrate....

பண்ணையாரும் பத்மினியும்...

எப்போதுமே படத்துக்கு  மார்க் கொடுக்கும் நான் இந்த படத்துக்கு கொடுக்கவில்லை..ஏனென்றால் இந்த படம் அதற்கு எல்லாம் அப்பாற்பட்டது...

ித்தியாசமான கதை/அற்புதமான நடிப்பு/மென்மையான திரைக்கதை நல்ல இசையுடன் உள்ள இந்த படம் கண்டிப்பாக வரவேற்க பட வேண்டிய படம்

படம் முழுவதும் அந்த பத்மினி காரை சுற்றியே சுழலுகிறது...

அதற்குள் வயதான ஜோடிக்குள் உள்ள அன்பு/அவர்களின் குழந்தைத்தனம் மற்றும் அவர்களை சுற்றி உள்ள உறவினர்கள் மனிதர்கள் எல்லாம் சேர்த்து மிக சுவாரசியமான திரைகதை அமைத்த இயக்குனருக்கு ஒரு மிக பெரிய சபாஷ்....

படத்தின் கதாநாயகன்/நாயகி என்னை பொறுத்த வரை பண்ணையாராக வரும் ஜெயப்ரகாஷ் மற்றும் அவர் மனைவியாக வரும் முன்னால் கதாநாயகி துளசி.

ஜெயப்ரகாஷ் நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார்....
காரை பார்த்தவுடன் சந்தோசம் ஆர்வத்தை வெளிபடுத்துவது/அந்த கார் தன்னை விட்டு  போகும் என்று தெரிந்தவுடன் வருத்தபடுவது/ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கார் ஓட்ட கற்பது/மனைவியிடம் பாசம் காட்டுவது/ மெக்கானிகிடம்  மிக பணிவாக பேசி கொண்டு இருக்கும் பொது அவன் விஜய் சேதுபதியை டிரைவர் என்று சொல்லியவுடன் எகிறுவது போன்ற அணைத்து காட்சிகளிலும் பின்னுகிறார்....
அவர் மனைவியாக வரும் துளசி அதே போல் அனைத்து உணர்சிகளையும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்...இந்த  கதாபாத்திரத்தின் ஒரு மைனசாக நான் கருதுவது அவருக்கு டுப்பிங்க் கொடுத்த குரல்(அனேகமாக முதல்வன் படத்தில் அர்ஜுன் அம்மாவாக நடித்தவர் தான் குரல் குடுத்து இருக்கிறார் என்று நினைக்கிறன்)...ஒட்டவில்லை....

ிஜய் சேதுபதி--மீண்டும் ஒரு திருப்திகரமான நடிப்பு...வாழ்த்துக்கள்..இவர் கமெர்சியல் படங்கள் தருகிறேன் என்று செல்லாமல் மீண்டும் மீண்டும் இதே போல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை..

படத்தில் இருக்கும் அத்தனை நடிகர் நடிகைகளும் நன்றாகவே செய்து இருக்கிறார்கள்

ிஜய் சேதுபதியின் காதலியாக வரும் ஐஸ்வர்யா ....
ாரின் கிளீன்னராக வரும் பாலா அசத்துகிறார்..இவர் சூரியை போல நல்ல வாய்புகள் பெறுவார் என்பது என் எண்ணம்..

வரும் போதே பிறந்த வீட்டில் இருந்து எதையாது ஆட்டையை  பிளான் போட்டு எடுத்து செல்லும் நீலிமா/பெண்டடியை தூண்டி விட்டு அமைதியாக டிவி பார்த்து கொண்டு இருக்கும் மாப்பிள்ளை/ சந்த்ராயன் ரேஞ்சுக்கு அலப்பறை பண்ணும் மெக்கானிக்/காரின் முன் சீட்டில் அமர்ந்து  பார்க்க காசு சேர்க்கும் சிறுவன்/வளர்ந்து சொந்த கார் வாங்கியும் கூட பத்மினியில் உட்கார ஆசைபடும் அட்டகத்தி தினேஷ்  இப்படி ஒவொரு பாத்திரங்களும் அழகு........

என்னை பொறுத்த வரை இந்த படம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்..குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயது தம்பதியினர்.....

மசாலா பட விரும்பிகள் இந்த படத்தை பார்த்து மொக்கை/போர் என்றுஎல்லாம் சொல்லி negative publicity காட்டிலும இந்த படத்தை தவிர்த்து விடவும்.......
.உங்களுக்காக சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற அருமையான படங்களை தருவார்கள் நீங்கள் அதை வெற்றி படம் ஆக்குங்கள்....