செவ்வாய், 13 மே, 2014

திருச்சியை சுற்றி உள்ள பழமையான கோவில்களை பற்றியது

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே எழுத வேண்டும் என்று நினைத்து இருந்த பதிவு இது...

திருச்சியை சுற்றி உள்ள பழமையான கோவில்களை பற்றியது...

முதலில் திருச்சி சென்னை பைபாஸில் உள்ள திருபட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்....

தமிழ்நாட்டில் பிரம்மாவிற்கு என்று தனியாக சன்னதி உள்ள கோவில் இது..இங்கு சென்று உங்கள் ஜாதகத்தை பிரம்மன்  சன்னதியில் வைத்து பூஜை உங்கள் தலையெழுத்தையே பிரம்மன் மாற்றுவார் என்பதும்/ அதே போல் இங்கு செல்வதற்கே ஒரு நேரம் காலம் வரும் போது தான் செல்ல முடியும் என்பதும் நம்பிக்கை...

2வது என் அனுபவம் கூட.....பத்மா இந்த கோவிலை பற்றி ஒரு வருடத்துக்கு முன்பே டிவியில் பார்த்து தெரிந்து கொண்ட பின் நாங்கள் செல்லலாம் என்று வெகுநாள் முயற்சித்தோம் ஆனால் ஒரு மாதத்திற்கு முன் தான் செல்ல முடிந்தது..ஆனால் என் மூலம் இந்த கோவிலை பற்றி கேள்விபட்டவர்கள் நிறைய பேர்  வெகு நாட்களுக்கு முன்பே சென்று வந்துள்ளார்கள்....

அதே போல் திருபட்டூர் செல்லும் வழியிலேயே இன்னொரு பழமையான கோவில் உள்ளது...அது அரங்கேற்ற அய்யனார் கோவில்..
பொதுவாக அய்யனார் எப்போதுமே அருவாளுடன் தான் காட்சி அளித்து பார்த்து இருகிறோம்..இங்கு ஓலை சுவடியுடன் காட்சி தருகிறார்...
சிறு பிள்ளைகள் இங்கு சென்று ஒரு நோட் புத்தகம் வாங்கி பூஜை செய்து அங்கேயே சிலவற்றை எழுதினால் படிப்பு நன்றாக வரும் என்பதும்/கல்யாணம் ஆகாதவர்கள் இங்கு வந்து  வழிபட்டு சென்றால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை....

திருபடுரில் இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒரு 3000 ஆண்டு பழைமையான ஒரு சிவன் கோவில்...
ஊட்டத்தூர் சுத்த ரத்ன ஈஸ்வரர் திருக்கோவில்...
இந்த கோவிலின் சிறப்புகள் சில...

ஆசியாவில் எங்குமே இல்லாத பஞ்ச பூதன கல்லினால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை இங்கு உள்ளது...
கிட்னி சம்பதமான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சிலையின் அருகில் இருந்து வழிபட்டு இங்கு உள்ள கிணறில் உள்ள தீர்த்தத்தை பருகினால் கிட்னி பிரச்சினைகள் தீரும் (அந்த சிலை









யின் உள்ள Vibration காரணமாக ) என்று சொல்லபடுகிறது...

அதே போல் கொடிமரத்தின் அருகே மேல் கூரையில் 12 நவகிரகங்களும்/27 நட்சத்திரங்களும்/12 ராசிகளும் செதுக்பட்டு உள்ளது சிறப்பு....

வாய்ப்பு இருப்பவர்கள் இங்கே சென்று வாருங்கள் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்....

சில படங்களையும் இங்கு உங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக