செவ்வாய், 28 அக்டோபர், 2014

பூம்பாறை முருகன் கோவில்...

கொடைக்கானல் மலையில் கொடைக்கானலில் இருந்து மேலும் ஒரு 25 கிலோ மீட்டர் சென்றால் அமைத்து உள்ள கிராமம் பூம்பாறை.
இங்கு தான் இந்த முருகன் கோவில் அமைந்து உள்ளது....  
இங்கு குழந்தை வேலப்பராக காட்சி தருகிறார்...

இந்த சிலையும் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாசானத்தால்(பழனி மலையில் உள்ள முருகரை போலவே)செய்து பிரதிஷ்டை செய்ததாக கூறபடுகிறது....

பழனி மலையில் உள்ள முருகரை போலவே இங்கும் காட்சி தருகிறார்.... பழனிமலை கோவிலின் நிர்வாகத்தில் தான் இந்த கோவிலும் உள்ளது.....

மிக ரம்மியமான/அமைதியான சூழ்நிலையில் அதிகம் கூட்டம் இல்லாத இந்த கோவிலில் முருகரை வழிபாடு செய்வது மனதுக்கு மிக நிறைவாக உள்ளது....

அதிலும் நாங்கள் சென்ற போது மிக லேசாக மழை தூறிக்கொண்டு இருந்ததால் மனதில் இன்னும் கொஞ்சம் பரவசம் கொண்டு இருந்தது....

இங்கு உள்ள பூசாரியிடம் பேசியபோது  அவர் சொன்னது..
இந்த கோவிலில் தை பூசத்தை ஒட்டி நடக்கும் திருவிழா மிக சிறப்பாக இருந்கும் என்று சொன்னார்.மேலும் இந்த கோவிலுக்கு வருவதற்கே முருகனின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே வர முடியும் என்றும் பலபேர் வாசல் வரை வந்து உள்ளே வந்து முருகனை தரிசிக்க முடியாமல் திரும்பி சென்று உள்ளதாகவும் கூறினார்....

வாய்ப்பு இருந்தால் நீங்களும் சென்று இந்த முருகரை அவசியம் வழிபடுங்கள்.........








.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக